ETV Bharat / bharat

'நிழலில் இருந்து நிஜ அதிகாரத்திற்கு...' - மராட்டியத்தைப் புரட்டிய தாக்கரே அரசியலின் கதை - பால் தாக்கரே மைக்கேல் ஜாக்சன்

சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக மகாராஷ்டிராவில் நிழலாக இருந்து ரிமோட் கண்ட்ரோல் ஆட்சி நடத்திவந்த தாக்கரே குடும்பம், தற்போது நிஜ ஆட்சி அதிகாரத்திற்குள் நுழைந்துள்ளது. சிவ சேனா என்ற சாம்ராஜியத்தை தோற்றுவித்து மராட்டிய அரசியலைப் புரட்டிப் போட்ட ஒற்றை மனிதர்தான் பால் கேசவ் தாக்கரே.

Bal Thackeray
Bal Thackeray
author img

By

Published : Nov 28, 2019, 2:48 PM IST

'ஜம்லேலிய மஜ்யா தமாம்' (குழுமியிருக்கும் சகோதர, சகோதரிகளே...) பால் தாக்கரேவின் உதட்டிலிருந்து இந்த வார்த்தைகள் உதிர்ந்த நிமிடம் மும்பையின் சிவாஜி மைதானத்திலிருக்கும் லட்சக்கணக்கான சிவ சைனிக் ஆதரவாளர்களின் ஆர்ப்பரிப்பில் மும்பை நகரமே அதிரும். அதே மும்பை சிவாஜி மைதானம் மீண்டும் ஒரு முறை ஆர்ப்பரிக்கக் காத்திருக்கிறது. இந்த ஆர்ப்பரிப்பு மராட்டிய புலிக்காக அல்ல, புலியின் குட்டிக்காக. பால் சாஹேப்பின் அன்பு மகன் 'உத்தவ் தாக்கரேயாகிய நான்' என முதலமைச்சராக பதவியேற்கும் தருணத்தை சிவசேனையின் தொண்டர்கள், தசரா விழாவாகவே கொண்டாடவுள்ளனர்.

மராட்டிய மன்னர் சிவாஜிக்கு மரியாதை செலுத்தும் தாக்கரே
மராட்டிய மன்னர் சிவாஜிக்கு மரியாதை செலுத்தும் பால் தாக்கரே

கேலிச்சித்திர கலகக்காரன்:

மராட்டியத்தின் சாம்ராட்டாக பால் கேசவ் தாக்கரேவை மகாராஷ்டிரா மக்கள் கொண்டாடினாலும், தாக்கரே தன்னை என்றும் அரசியல் 'கேலிச்சித்திரக்காரர்' என்றே சொல்வார். ஆம், தாக்கரே தன்னை அரசியல்வாதியாக என்றும் பிரகடனப்படுத்திக் கொண்டதே இல்லை. 'நான் ஒரு அரசியல்வாதியில்லை. என்னை அவ்வாறு கூறி அவமானப்படுத்த வேண்டாம். நான் ஒரு பொலிட்டிக்கல் கார்டூனிஸ்ட் மட்டுமே' என பிரபல ஊடகவியலாளரிடம் நேரடியாகக் கூறியவர் பால் தாக்கரே. ஒரு அரசியல்வாதியாக முன்னிறுத்தப்பட விரும்பாத ஒருவரின் இயக்கத்திற்கு இந்தியாவின் வர்த்தக மையமாகக் கருதப்படும் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் நாற்காலி தற்போது கிடைத்துள்ளது விந்தைதானே. இந்த விந்தை நிகழ்வுக்குப் பின்னணியில் மகாரஷ்டிரா அரசியல் பாதையை புரட்டிப்போட்ட ஒற்றை மனிதனின் வரலாறு அடங்கியுள்ளது.

நாடு சுதந்திரம் பெற்ற தொடக்கத்தில், இந்தியாவின் ஒரே வர்த்தக மையமாக விளங்கியது அன்றைக்கு பம்பாய் என்றழைக்கப்பட்ட மும்பை நகர் மட்டுமே. தமிழ்நாடு, கேரளா என்று தென் மாநிலங்கள் தொடங்கி குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார் என்று வடமாநிலங்கள் வரை நாட்டில் பிழைப்புத் தேடி அலையும் மக்களின் புகலிடமாக மும்பை மாறத்தொடங்கியது. அரசு வேலைகள் என்றால் தென்மாநிலத்தவர்கள் ஆதிக்கம், வணிகம் சார்ந்த வேலைகள் என்றால் குஜராத்தைச் சேர்ந்த பெரு வணிகர்களின் ஆதிக்கம் என மகாராஷ்டிரா மண் அம்மக்களின் பிடியிலிருந்து வெளியேறத் தொடங்கியதை பால் தாக்கரே என்ற பத்திரிகையாளர் ஆத்திரத்துடன் உற்றுநோக்கத் தொடங்கினார்.

இளம் வயதில் போராட்டக் களத்தில் பால் தாக்கரே

அந்த ஆத்திரத்தின் வெளிப்பாடாகத்தான் 1966ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி சிவாஜியின் சேனை என்ற பொருள்படும் 'சிவ சேனா' இயக்கத்தைத் தோற்றுவித்தார். மராட்டியர்களின் உரிமைகள் வேற்று மாநிலத்தவர்களால் பறிக்கப்படுவதாக 'மார்மிக்' என்ற இதழில் கேலிச்சித்திரம் வரைந்தும், காத்திரத்துடன் எழுதியும் வந்த தாக்கரே, சிவசேனாவின் மூலம் நேரடி கள அரசியலில் குதித்து, உறங்கிக்கொண்டிருந்த மராட்டியப் பெருமையை தட்டியெழுப்பத் தொடங்கினார். சிவசேனா தோற்றுவிக்கப்பட்டபின் 1966ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையின் புகழ் பெற்ற சிவாஜி மைதானத்தில் தசரா விழா உரையை நிகழ்த்தினார் பால் தாக்கரே. அன்று தொடங்கி 2012ஆம் ஆண்டு வரை பால் தாக்கரேவின் உரைக்காக சிவாஜி மைதானத்தின் செவிகள் திறந்தபடியே இருந்தன.

தம்பி மகன் ராஜ் தாக்கரேவுடன் பால் தாக்கரே

கட்சி தொடங்கிய அடுத்தாண்டே மும்பை கார்ப்பரேஷன் தேர்தலில் போட்டியிட்ட சிவசேனா 120 இடங்களில் 42 இடங்களைக் கைப்பற்றியது. இந்த உற்சாகத்தில் 1968ஆம் ஆண்டு சிவ சேனாவின் தொழிலாளர் சங்கமான 'பாரதிய காம்கார் சேனா' தொடங்கப்பட்டது. தீவிர வலதுசாரியான சிவசேனா, அன்று மும்பையை கோலாச்சிக் கொண்டிருந்த இடதுசாரி தொழிற்சங்கத்தின் ஆதிக்கத்தை மெல்ல மெல்ல அழிக்கத்தொடங்கியது. 'இடது சாரிகளின் எதிரி நான்' என நேரடியாக தன்னை அறிவித்துக்கொள்வார் பால் தாக்கரே. ஆனால் எமர்ஜென்சி நாயகனான சோஷலிஸ்ட் தொழிற்சங்கத் தலைவர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் பால் தாக்கரேவின் உற்றத் தோழர் என்பது நகைமுரண்.

மாராட்டிய அரசியலிலிருந்து இந்துத்துவ அரசியலுக்கு...:

கட்சி தொடங்கிய ஐந்தாவது ஆண்டிலேயே மும்பை கார்ப்பரேஷனின் மேயர் பதவியை சிவசேனா கைப்பற்றியது. 1971ஆம் ஆண்டு அக்கட்சியின் ஹேமச்சந்திர குப்தே மும்பையின் மேயரானார். இந்த வெற்றிக்குப்பின் மும்பை நகரைத் தாண்டி தனது சிவசேனா ஒட்டுமொத்த மராட்டிய மாநிலத்திலும் பரவிட வேண்டும் என முனைப்புக் காட்டத் தொடங்கினார் பால் தாக்கரே.

அதன்பின்னர், 'இந்துத்துவா' அரசியலைக் கையிலெடுத்த தாக்கரே மராட்டிய மக்களின் சாம்ராட்டில் இருந்து, இந்து மக்களின் சாம்ராட்டாக தன்னை மாற்றத் தொடங்கினார். 1990களில் பாஜகவுடன் கைகோர்த்த தாக்கரே, பாபர் மசூதி சம்பவம், மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் போன்ற காலக்கட்டத்தின் பின்னணியில் இந்தியாவின் தீவிர இந்துத்துவ அரசியல் தலைவராக உருவெடுத்தார். பால் தாக்கரேவின் சிந்தையிலிருந்து புறப்படும் ஒவ்வொரு கருத்தும் வில்லிலிருந்து பாய்ந்த அம்பாக சிவசேனாவின் நாளிதழான சாம்னாவில் அரசியல் கட்டுரைகளாகவும், கார்ட்டூன்களாகவும் சீறிப்பாய்ந்து மகாராஷ்டிராவின் அரசியல் களத்தில் அனல் கக்கின.

பாஜக தலைவர்களான வாஜ்பாய் அத்வானியுடன் பால் தாக்கரே
பாஜக தலைவர்களான வாஜ்பாய், அத்வானியுடன் பால் தாக்கரே

1995ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா - பாஜக கூட்டணி வெற்றி பெற, சிவசேனாவின் முதல் முதலமைச்சராக மனோகர் ஜோஷி, சிவாஜி மைதானத்தில் தாக்கரேவின் ஆசியுடன் பதவியேற்றார். தேர்தல் அரசியல் பதவிகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத தாக்கரே, மராட்டிய மண்ணின் அதிகார அரசியலில் 'ரிமோட் கண்ட்ரோல்' ஆகவே இயங்கிவந்தார். இந்த ரிமோட் கண்ட்ரோலின் வீச்சானது நாட்டில் எந்தவொரு தனிநபருக்கும் கிடைக்காத ஒன்று என்றே சொல்லலாம். பாலிவுட் தொடங்கி கிரிக்கெட் வரை மராட்டியத்தில் தாக்கரேவின் ரிமோட் கண்ட்ரோல் பட்டன் ஓகே சொல்லாமல் எதுவும் அசையாது.

மராட்டியத்தின் ரிமோட் கண்ட்ரோல்:

மும்பை கலவரம் குறித்து மணிரத்னம் தான் எடுத்த பம்பாய் படத்தை, சென்சார் போர்டு ஒப்புதல் அளித்த கையுடன், தாக்கரேவின் பார்வைக்கு பிரத்யேகமாகத் திரையிட்டார். சென்சார் போர்டு ஒப்புதல் அளித்தாலும் தாக்கரேவின் ஒப்புதல் இல்லாமல் மகாராஷ்டிரத்தில் படத்தைத் திரையிட முடியாது என்பதே அப்போதைய நிதர்சனம்.

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் நிறவெறிதாக்குதலுக்குள்ளான சமயத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மும்பைக்கு விளையாட வந்திருந்தது. ஆஸ்திரேலிய அணி மும்பை மண்ணில் விளையாடக் கூடாது என்றார் பால் தாக்கரே. தாக்கரேவின் கண்ணசைவைக் கட்டளையாகக் கொண்ட சிவசைனிக்குகள் மும்பை வான்கடே மைதானத்துக்குள் புகுந்து மைதானத்தைச் சூறையாடினர். மும்பையில் போட்டி நடைபெறவில்லை.

சச்சின் டெண்டுல்கருடன் பால் தாக்கரே
சச்சின் டெண்டுல்கருடன் பால் தாக்கரே

மும்பை குண்டுவெடிப்புக்குப்பின் ஐ.பி.எல்லில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட அணுமதிக்கப்படாத சமயம், அப்போது விளையாட்டையும் அரசியலையும் கலக்க வேண்டாம் என்றும் பாகிஸ்தான் வீரர்களை அனுமதிப்பதில் தவறில்லை என்றார் பாலிவுட்டின் பாதுஷாவும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக் கான். 'உங்கள் வீடு லாகூரிலோ, கராச்சியிலோ இல்லை, மும்பையில் தான் இருக்கிறது என்பதை ஷாருக் கான் நினைவில் கொள்ள வேண்டும்' என்றார் தாக்கரே. விழுந்தடித்துக்கொண்டு தாக்கரேவின் இல்லமான மாதோ ஸ்ரீக்கு சென்ற ஷாருக் கான், தாக்கரேவிடம் தனது பேச்சுக்கான விளக்கத்தைத் தெரிவித்தார். தாக்கரேவின் ரிமோட் கண்ட்ரோல் ஆட்சிமுறைக்கு இது போன்று நூற்றுக்கணக்கான உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ரஜினியை கட்டித் தழுவம் பால் தாக்கரே
ரஜினியை கட்டித் தழுவும் பால் தாக்கரே

'பால் தாக்கரே எனக்கு கடவுள் போன்றவர்' என தாக்கரேவை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியதும், பாப் உலகின் மன்னனான மைக்கேல் ஜாக்சன் மும்பை வந்த போது, தனது வீட்டுக்கு அழைத்து உபசரித்து ஸ்டைலாக புகைப்படம் எடுத்துக்கொண்டதும் தாக்கரே என்ற ஆளுமையின் கவர்ச்சிக்கான சில உதாரணங்கள்.

மைக்கெல் ஜாக்சனுடன் போஸ் கொடுக்கும் தாக்கரே
மைக்கேல் ஜாக்சனுடன் போஸ் கொடுக்கும் தாக்கரே

நிழலிருந்து நிஜ அதிகாரத்திற்கு...:

சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக மகாராஷ்டிராவில் நிழல் அரசியலாக ரிமோட் கண்ட்ரோல் ஆட்சி நடத்திவந்த தாக்கரே குடும்பம் தற்போது நிஜ ஆட்சி அதிகாரத்திற்குள் நுழைகிறது. கடந்த பத்தாண்டுகளில் சிவசேனாவின் செல்வாக்கு மராட்டியத்தில் மெல்ல மெல்ல மங்கத் தொடங்கியது. 2006ஆம் ஆண்டு பால் தாக்கரேவுடன் முரண்பட்டு அவரது தம்பி மகன் ராஜ் தாக்கரே கட்சியைவிட்டு பிரிந்து மகாராஷ்ட்ர நவநிர்மாண் சேனா என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கியது பெரும் இழப்பு. 2012இல் பால் தாக்கரே மறைவுக்குப்பின் அவரின் ஆளுமைத் திறனை உத்தவ் தாக்கரேவால் நிரப்பமுடியமல் இன்றுவரைத் தவித்து வருகிறார். 15 ஆண்டுக்குமுன் ஜூனியர் பார்ட்னராக இருந்த பாஜக, சிவசேனாவை முந்திக்கொண்டு மராட்டியத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துவிட்டது.

சோனியா காந்தியுடன் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே
சோனியா காந்தியுடன் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே

தன் முதலுக்கே மோசமாகும் சூழல் உருவாகவே, இந்துத்துவ சித்தாந்தக் கட்சியான சிவசேனா, மற்றொரு இந்துத்துவக் கட்சியான பாஜகவை தனிமைப்படுத்த, தனது அரசியல் எதிரிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கைகோர்த்துள்ளது. தாக்கரே குடும்பத்தின் முதல் அரசியல் அதிகாரத் தலைமையாக இன்று உத்தவ் தாக்கரே உருவெடுத்துள்ளார். மராட்டிய பெருமையை மீட்டெடுத்த பால் தாக்கரேவின் மகன் உத்தவ் மங்கிவரும் சிவசேனாவின் பெருமையையும் மீட்டெடுப்பாரா என்ற கேள்வியுடன் காலம் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.

முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் தந்தைக்கு வணக்கம் செலுத்தும் உத்தவ் தாக்கரே

Intro:Body:

From remote control to Real politics, Crucial shift of Thackeray family politics  

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.