ETV Bharat / bharat

'நீ கொண்டாட பிறந்தவன்...' - நண்பேன்டா...!

சாதி, மதங்களைக் கடந்துவரும் அந்த நட்பை தினம் தினம் கொண்டாடினாலும், தன் நண்பனுக்காக ஒரு தினத்தில் கொண்டாடுவதில் ஒவ்வொருவரும் மகிழ்கின்றனர்.

author img

By

Published : Aug 4, 2019, 11:30 AM IST

Updated : Aug 4, 2019, 12:49 PM IST

'உன் நண்பன் யார் என்று சொல்; நீ யார் என்று சொல்கிறேன்!' என்ற சொல்லாடல் மிகவும் பிரபலம். ஏனென்றால் நாம் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நாம் சேரும் சேர்க்கை நம்மை நல்ல வழிக்கு கொண்டுவரும் என்ற நம்பிக்கையுடன் நகருவதுதான் அந்த மூன்றெழுத்து. அதுதான் நட்பு.

குழந்தைப் பருவம் முதல் முதுமை வரை நாம் அனைவரும் வயது வித்தியாசமின்றி நட்பை பாராட்டி சீராட்டிதான் வருகிறோம். இந்த நட்பு இப்போதுதான் வந்ததா என்றால், இல்லை. மனிதகுலம் தோன்றிய காலத்திலேயே தோன்றியது.

90’ஸ் கிட்ஸ் கவிதை... எங்கும் ..எதிலும் 90’ஸ் கிட்ஸ்...!
90’ஸ் கிட்ஸ் கவிதை... எங்கும்... எதிலும் 90’ஸ் கிட்ஸ்...!

இருப்பினும், நட்புக்கென புதிய இலக்கணம் வகுத்தது தமிழ் சமூகம் என்றால் அது மிகையல்ல. அது எப்படி என்றால் நம் மூப்பாட்டனின் மூத்தோரான ஐயன் திருவள்ளுவர் இயற்றிய உலகப் பொதுமறை இலக்கியமான திருக்குறளில் நட்பை பற்றி நட்பியல் எனும் அதிகாரத்தையே படைத்துள்ளார். அதில் நட்பு எப்படி இருக்க வேண்டும், நண்பன் என்பவன் எவ்வாறு இருக்க வேண்டும் உள்ளிட்ட பலவற்றை புட்டுபுட்டுவைத்துள்ளார். அதில் சில குறள்கள் வாசகர்களின் பார்வைக்கு...

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு
- நட்பைப் போல் ஒருவன் செய்து கொள்வதற்கு அருமையான செயல் எதுவுமே இல்லை.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
- ஆற்று வெள்ளத்தில் உடையை இழந்தவனது கை மானத்தை மறைக்க உதவும்; அது போலத்தான் நண்பன் துன்பப்படும் வேளையில் விரைந்து உதவ வேண்டும்.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு
- நட்புறவு வைத்துக் கொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டுமின்றி, அவர் தவறு செய்யும்போது, அதை கடிந்து திருத்த வேண்டும்.

அழிவினவை நீக்கி ஆறுய்த்து அழிவின்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு - தனது நண்பனுக்கு நேரும் தீமையை நீக்கி அவனை நல்வழியில் செலுத்துவது மட்டுமின்றி துன்பம் வரும்வேளையில் அவனுடனிருந்து அனுபவிப்பதே நட்பாகும்

புனிதமான எனது நட்புக்காக...!
புனிதமான எனது நட்புக்காக...!

நண்பன் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அதைக் காட்டிலும் அவன் மீதான அன்பும் அக்கறையும் அதீதமாக இருக்க வேண்டும். இந்த அதீதத்தை வெளிப்படுத்த இந்த ஏழு ஜென்மம் போதாது.

இருந்தாலும் அந்த நட்பை கொண்டாட வேண்டுமே. அப்படியாக அமைந்ததுதான் இந்த நண்பர்கள் தினம். நட்பை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வார ஞாயிற்றுக்கிழமையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

கவியாமான உனக்கு எதுக்கு நண்பா கவிதை..இருந்தாலும் எழுதுவோம்லே...!
காவியாமான உனக்கு எதுக்கு நண்பா கவிதை... இருந்தாலும் எழுதுவோம்ல...!

ஈடிவி பாரத் சார்பாக வாசகர்களாகிய தோழமைகளுக்கு நண்பர்கள் தின வாழ்த்துகள்!

Intro:Body:

Friendship day spl

Conclusion:
Last Updated : Aug 4, 2019, 12:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.