இதனை உடனடியாக மறுத்துள்ள கேரள மீன்வளத் துறை அமைச்சர் மெர்சி குட்டி, இது முற்றிலும் தவறான கருத்து. இது மத்திய அமைச்சரின் மோசமான மனநிலையைக் காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
அவர், தான் இருக்கும் பதவியின் தரத்தை உணராமல் பேசிக்கொண்டிருக்கிறார் என்று கூறும் மெர்சி குட்டி, முதலமைச்சர் பினராயி விஜயன் மக்களை அவரவர் வீடுகளுக்கு கொண்டுவர பெரும் முயற்சி எடுத்துவருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
“புலம்பெயர்ந்த மாநில மக்களைக் கொண்டு மே 7ஆம் தேதிமுதல் விமானம் கேரளா வந்தது. இதுவரையில் 21 ஆயிரத்து 839 பேர் மாநிலம் திரும்பியுள்ளனர். உலக நாடுகள் முழுவதிலுமிருந்து இதுவரை 3.80 லட்சம் பேர் வீடு திரும்ப பதிவுசெய்துள்ளனர். இதில் 90 விழுக்காடு பேர் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்கள்” எனக் கேரள அரசு அறிவித்துள்ளது.