ETV Bharat / bharat

பெண்கள் தினம்: நொய்டா மெட்ரோ நிலையங்களில் இலவச நாப்கின்கள்!

நொய்டா: பெண்கள் தினத்திலிருந்து 21 மெட்ரோ நிலையங்களில் இலவசமாக நாப்கின்களைப் பெற்றுக் கொள்ளலாம் என மெட்ரோ ரயில் நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

நொய்டா மெட்ரோ நிலையங்களில் இலவச நாப்கின்கள்

author img

By

Published : Mar 6, 2020, 9:15 AM IST

உத்தரப் பிரதேச நொய்டா மெட்ரோ கழகத்தைச் சேர்ந்த அக்வாலைன் வழித்தடத்தில், நொய்டாவில் உள்ள பிரிவு 76, கிரேட்டர் நொய்டாவில் உள்ள பாரி சோக் ஆகியன பிங்க் நிலையங்கள் என வரையறுக்கப்படுகின்றன. இங்கு, ஏற்கனவே, தாய்ப்பால் கொடுக்கும் தனி அறை, குழந்தைகளுக்கு டயப்பர் மாற்றும் அறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பெண்கள் தினமான மார்ச் 8ஆம் தேதியிலிருந்து பிங்க் நிலையங்களில் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படவுள்ளன. குறிப்பாக, அவ்விரு நிலையங்களிலும், முழுக்க பெண் ஊழியர்களைப் பணி நியமனம்செய்வது குறித்து ஆலோசிக்கப்படுகின்றது. பாதுகாப்பு குறித்த பணிகளைத் தவிர பிற வேலைகளுக்குப் பெண்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக மெட்ரோ அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மெட்ரோ அலுவலர் ரித்து மகேஷ்வரி, “21 நிலையங்களிலும் நாப்கின்களை எரிக்கும் இயந்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கான டோக்கனை மெட்ரோ நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

இந்தச் சுகாதார நடவடிக்கைக்கு, ஏசிஈ ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆதரவளிக்கிறது. ஏசீஈ குழுமத்தைச் சேர்ந்த ஏசீஈ ஸ்டுடியோஸ் ஒரு வடத்திற்கான நாப்கின்களின் செலவை ஏற்றுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: ஹோலி விடுமுறைக்குப் பின்னர் சிஏஏ வழக்குகள் குறித்து கபில் சிபல் முறையிடலாம் - உச்ச நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.