இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம், "கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட இலவச தரிசன டோக்கன்கள் மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று (அக்.26) முதல் மீண்டும் வழங்கப்படும்.
நாளொன்றுக்கு 3 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் ஆதார் அட்டையை காண்பித்து டோக்கன் பெற்றுக் கொள்ளலாம். இன்று காலை முதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்துள்ளது.
தரிசனத்திற்கு முந்தைய தினம் டோக்கன் பெற வேண்டும், டோக்கன் உள்ளவர்களுக்கு மட்டுமே திருமலையில் அனுமதி அளிக்கப்படும் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் அக்.16ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்ற நவராத்திரி பிரம்மோற்சவத்தில், உயர் அலுவலர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மட்டும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்; பக்தர்களுக்கு அழைப்பு இல்லை” - திருப்பதி தேவஸ்தானம்