ETV Bharat / bharat

பிரான்ஸ் டூ இந்தியா : புதுச்சேரி சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா!

புதுச்சேரி : இந்தியாவுடன் புதுச்சேரி இணைந்த நாளை நினைவுகூரும் வகையில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா அரசு சார்பில் வில்லியனூரில் நடைபெற்றது.

பிரான்ஸ் டூ இந்தியா : புதுச்சேரி சட்டப்பூர்வப் பரிமாற்ற நாள் விழா !

author img

By

Published : Aug 16, 2020, 2:44 PM IST

பிரான்ஸ் நாட்டின் ஆளுமையின் கீழிருந்த புதுச்சேரி அரசு இந்தியாவோடு இணைந்த நாளை நினைவுகூரும் வகையில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா, சுதந்திர தினவிழா ஆகியவை வில்லியனூர் அருகே உள்ள கீழூரில் நடைபெற்றது.

பிரான்ஸ் நாட்டு ஆட்சியின் கீழ் நிர்வகிக்கப்பட்டுவந்த புதுச்சேரி அரசு, இந்தியாவுடன் இணைவது தொடர்பாக புதுவை மக்கள் பிரதிநிதிகள் 178 பேரிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1954ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி இதற்கான வாக்கெடுப்பு வில்லியனூர் அருகே உள்ள கீழூரில் நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக 170 பேரும், எதிராக எட்டு பேரும் வாக்களித்தனர். அதைத்தொடர்ந்து பல்வேறு சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றத்தில் 1962ஆம் ஆண்டு ஆகஸ்டு 16ஆம் தேதி புதுச்சேரி, இந்தியாவுடன் இணைய ஒப்புதல் அளித்து சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

அதன் பிறகு புதுச்சேரி இந்தியாவுடன் இணைக்கப்பட்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முறைப்படி ஏற்றுக்கொண்டது. இந்த வரலாற்று நிகழ்வுக்கான வாக்கெடுப்பு நடந்த கீழூரில் 1954ஆம் ஆண்டு புதுச்சேரி சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட தியாகிகளின் நினைவாக, தியாகிகள் நினைவு தூண் மற்றும் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது.

இந்த ஆண்டு புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த நாளை நினைவுகூரும் வகையில் கீழூரில் உள்ள நினைவிடத்தில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையேற்று தேசியக் கொடி ஏற்றி வைத்து, காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து, விழாவில் தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து முதலமைச்சர் நாராயணசாமி மரியாதை செலுத்தினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.