அருண் ஜேட்லியின் மறைவிற்கு பிரான்ஸின் இந்தியத் தூதர் அலெக்ஸாண்ட்ரே ஜீக்லர் தனது ட்விட்டர் பக்கத்தில்," மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் குடும்பத்திற்கும் அவரின் மீது அன்பு கொண்டவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும் மாநிலங்களவையின் முக்கியமான குரலாகவும் இருந்த அருண் ஜேட்லிக்கு துக்கம் அனுசரிக்கும் இந்த வேளையில் பிரான்ஸூம் இந்தியாவின் துக்கத்தில் பங்குகொள்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.