தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவல்களையடுத்து இன்று காலை பாதுகாப்புப் படைகள் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கின.
தேடுதலின் முடிவில் பயங்கரவாதிகள் இருக்கும் பகுதியை பாதுகாப்புப் படைகள் சுற்றி வளைத்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த மோதலில் பயங்கரவாதிகள் நான்கு பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் மேலும் தகவல்களுக்காகக் காத்திருப்பதாகவும் காவல் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.