சத்தீஸ்கர் மாநிலம் பெமேத்ராவில் இன்று காலை பேருந்து, லாரி மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். 8க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.
காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில், பேருந்தில் பயணித்தவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்பதும் புனேவிலிருந்து பிலாஸ்பூருக்கு சென்று கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
இதையும் படிங்க: ஆம்புலன்ஸ் வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு