சர்வதேச மனநல தினம் நேற்று முன்தினம் (அக்.10) அனுசரிக்கப்பட்ட நிலையில் உலக சுகாதார அமைப்பு மனநலம் குறித்த விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் முக்கிய விவரங்களை தென்கிழக்கு ஆசியாவுக்கான பிராந்திய இயக்குநர் பூணம் கே.சிங் தெரிவித்தார்.
அந்த ஆய்வின்படி, கோவிட்-19 பெருந்தொற்று உலகின் 93 நாடுகளின் மனநல சேவைகளைப் பாதித்துள்ளது. உலகின் 10இல் ஒரு நபருக்குத்தான் சிறப்பான மனநலம் உள்ளது. மனநல சேவைக்களுக்கு குறைந்த செலவே ஆகும் என்ற போதிலும், மக்களுக்கு குறைவான அளவிலேயே மனநல சேவைகள் கிடைக்கின்றன.
குறிப்பாக தென் கிழக்காசிய பிராந்தியத்தில் மிகக்குறைவான மனநல சேவையாளர் உள்ளனர். இங்கு ஐந்தில் ஒருவருக்கு மட்டுமே மனநல சேவைகளை பெற முடிகிறது. இருப்பினும் உலக சுகாதார அமைப்பு இந்த பிராந்தியத்தில் மனநல மேம்பாட்டிற்கு பெரிதும் உதவத் தயாராக உள்ளது.
மதுப்பழக்கம், ஆட்டிசம், தற்கொலை எண்ணம் போன்றவற்றால் ஏற்படும் மனப்பிறழ்வுக்கு சிகிச்சை அளிப்பதில் உலக சுகாதார அமைப்பு தீவிரம் காட்டிவருகிறது எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ரூ. 5.35 லட்சம் கோடி மதிப்பிலான சாலை கட்டுமானத் திட்டம் - மத்திய அரசு அனுமதி