ETV Bharat / bharat

நகைக்கடையில் நஷ்டம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தற்கொலை!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நகைக்கடையில் ஏற்பட்ட இழப்பு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை

author img

By

Published : Sep 19, 2020, 7:49 PM IST

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜம்தோலி அருகேயுள்ள ராதிகா விஹார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் யஷ்வந்த் சோனி. இவரது மனைவி மம்தா சோனி. இவர்களுக்கு பரத், அஜித் என்னும் இரு மகன்கள் உள்ளனர்.

இவர்கள் ஜெய்ப்பூர், அல்வார் ஆகிய பகுதிகளில் நகைக்கடைகள் வைத்து நடத்திவந்தனர். வியாபாரத்தில் இழப்பு ஏற்பட்டதாலும், கடன் அதிகரித்ததாலும் பல நாள்களாக குடும்பத்தினர் மன வேதனையில் இருந்துவந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று (செப். 19) யஷ்வந்த் சோனியின் வீட்டிற்கு அவரது சகோதரர் சென்று பார்த்தபோது, வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதைக்கண்ட அதிர்ச்சியடைந்த அவர் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் நான்கு பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ”தற்கொலை தீர்வல்ல!” - நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார் அபிலாஷா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.