ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான துர்க்கை அம்மன் சிலையை கடத்தி அதை வெளிநாட்டுக்கு விற்க முயற்சித்த நான்கு பேரை ஹைதரபாத் சிறப்பு காவல்துறை கைது செய்துள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் வசித்துவரும் நபரான தேவேந்தர் மூன்றாண்டுகளுக்கு முன் மும்பையில் நகமனி என்ற அபூர்வ வகையான கல்லை முறைகேடாக வாங்கியுள்ளார். அதன் பின்னர் பஞ்சலோக துர்க்கை அம்மன் சிலை ஒன்றையும் கடத்தி இரண்டையும் தனது வீட்டில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக பதுக்கிவைத்துள்ளார்.
அபூர்வ நாகமணி கல்லுடன் கூடிய துர்க்கை சிலையை வழிபடுவது பெரும் அதிர்ஷ்டத்தை தரும் என்ற கதையை உருவாக்கி அதை வெளிநாட்டினருக்கு விற்கும் திட்டத்தை தீட்டியுள்ள தேவேந்தர், அதற்கு உதவி செய்யுமாறு அஷ்ரப் என்ற நபரைத் தொடர்பு கொண்டுள்ளார். தேவேந்தருக்கு ஜான், பிரேம்சந்த் குப்தா என்ற இருவரையும் அறிமுகம் செய்துவைத்த அஷ்ரப் சிலையை ஒரு கோடி ரூபாய்க்கு பேரம் பேசி விற்கும் முயற்சியில் களமிறங்யுள்ளனர்.
இது குறித்து துப்பு கிடைத்ததும் ஹைதராபாத் மேற்கு மண்டல சிறப்பு காவல் படை அஷ்ரப்பை பின்தொடர்ந்து சென்று நான்கு பேரையும் கையும் களவுமாகப் பிடித்துள்ளது. மேலும், அவர்களிடமிருந்து சிலை மற்றும் கல்லையும் மீட்டுள்ளது. இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு மேலும் பல கடத்தல் கும்பலின் தகவலை திரட்டும் பணியை ஹைதராபாத் காவல் துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் ரகசிய தகவல் கிடைத்துள்ளது- சிபிசிஐடி