தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கச்சிபவுலி என்னும் பகுதியில் அதிகாலை 3 மணியளவில் டிப்பர் லாரி ஒன்று கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்,
ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த நால்வரின் உடல்கள் உடற்கூராய்வுக்காக ஒஸ்மானியா மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
உயிரிழந்த இளைஞர்கள் மதாபூரில் உள்ள ஆண்கள் விடுதியில் வசித்து வந்த கட்ராகட்டா சந்தோஷ் (25), சிந்தா மோகன் (22), பரத்வாஜ் (20), ரோஷன், பவன் என காவல்துறையினர் தெரிவித்தனர். அதிவேகத்தில் வாகனங்கள் வந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்றும் கூறினர்.
இதையும் படிங்க... மாயமான ரவுடி சடலமாக மீட்பு: நண்பர்களுக்கு வலைவீச்சு!