ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட சிதம்பரம் டெல்லயில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு, வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிறையில் உள்ள ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அனுமதிக்குமாறு, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி அஜய்குமார் குகர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திகார் சிறையில் உள்ள ப. சிதம்பரத்திடம் இன்றும், நாளையும் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.
இதைத் தொடர்ந்து இன்று அமலாக்கத்துறையினர் ப. சிதம்பரத்திடம் விசாரணையைத் தொடங்கினர்.
ஏற்கெனவே, சிபிஐ தொடர்ந்த வழக்கில், சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், அமலாக்கத்துறை சார்பில் ஜாமீன் கிடைக்காததால், ப. சிதம்பரம் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் ஜாமீன் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"நான் தலைமறைவா?"- ஊடகங்கள் முன் தோன்றிய ப.சிதம்பரம்