முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு 8.45 மணியளவில் ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணி சார்பில், 2004 முதல் 2014ஆம் ஆண்டுவரை, நாட்டின் பிரதமராகப் பதவி வகித்த மன்மோகன் சிங், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
87 வயதாகும் மன்மோகன் சிங்கின் உடல்நிலை தற்போது தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருவதாக இதய மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
1982ஆம் ஆண்டுமுதல் 1985ஆம் ஆண்டுவரை ரிசர்வ் வங்கி ஆளுநராகவும், நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது நிதியமைச்சராகவும் மன்மோகன் இருந்தார். 1998 முதல் 2004ஆம் ஆண்டுவரை மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர் செயல்பட்டார்.