முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75ஆவது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அவரின் நினைவுகளை நினைவு கூறும் வகையில் ராஜீவ் யூத் ஃபவுன்டேஷன் ஒரு பொது நிகழ்ச்சியை நடத்தியது. இதில் கலந்துகொண்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், " ஒரு சில பிரிவால் தூண்டிவிடப்படும் மதவாதம், வெறுப்புணர்வு, கும்பல் வன்முறைகள் நம் ஆட்சி முறையை பாதிக்கிறது.
இவை நாட்டில் அதிகமாவதால் நம் அரசியலமைப்பின் நோக்கங்களான அமைதி, தேசிய ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. நாட்டின் ஒற்றுமையைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை. தேசத்தை ஒற்றுமையாக வைத்திருப்பது மதச்சார்பின்மை. எந்த மதமும் வெறுப்புணர்வை கற்று தருவதில்லை. ராஜீவ் காந்தியின் பிறந்த நாளான இன்று அவர் சொல்லி கொடுத்த மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், சகிப்பு தன்மை ஆகியவற்றை நினைவுகூர்ந்து, அதன் வழியில் நடக்க வேண்டும்" என்றார்.