மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் மூத்தத் தலைவருமான கைலாஷ் ஜோஷி உடல்நலக்குறைவால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவருக்கு வயது 90. ஜோஷியின் சொந்த கிராமமான ஹட்பிபிலியாவில் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு ஜோஷியின் மனைவி மறைந்துவிட்ட நிலையில், தனது மூன்று மகன்கள், மூன்று மகள்களுடன் மத்தியப் பிரதேசத்தில் ஜோஷி வாழ்ந்துவந்தார். மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ஜோஷியின் இறப்பு செய்தியை அறிந்து மருத்துவமனைக்குச் சென்று மரியாதை செலுத்தினார். ஜூலை 14ஆம் தேதி 1929ஆம் ஆண்டு பிறந்த இவர், மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சராக 1977ஆம் ஆண்டு முதல் 1978ஆம் ஆண்டு வரை இருந்தார்.
சட்டப்பேரவை உறுப்பினராக எட்டு முறை இருந்துள்ள இவர், மாநிலங்களவை, மக்களவை என இரு அவைகளிலும் உறுப்பினராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மோடி மனக்குரலில் ஒலித்த பாரதியார் பாடல்