ETV Bharat / bharat

தமிழ்நாட்டிற்காகக் குரல் கொடுத்த கர்நாடக எம்.பி.! - Adani

டெல்லி: காட்டுப்பள்ளியில் புதிய துறைமுகம் உருவாக்கப்பட்டால், சென்னைக்கு அது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம்  ரமேஷ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்காகக் குரல் கொடுத்த கர்நாடக எம்பி!
author img

By

Published : Jul 15, 2019, 5:30 PM IST

சென்னையை அடுத்துள்ள எண்ணூர் அருகே காட்டுப்பள்ளியில் 51 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அதானி நிறுவனம் புதிய துறைமுகத்தைக் கட்டவுள்ளது. இது குறித்து இன்று நாடாளுமன்றத்தின் பூஜ்ய மணி நேரத்தில், முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்தத் துறைமுகத்தால், தமிழ்நாடு கடுமையாகப் பாதிக்கப்படும் என்றார். இதன் மூலம் புலிகட் ஏரியின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என்று எச்சரித்த அவர், இத்திட்டத்தால் சுமார் 30 ஆயிரம் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்துள்ள எண்ணூர் அருகே காட்டுப்பள்ளியில் 51 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அதானி நிறுவனம் புதிய துறைமுகத்தைக் கட்டவுள்ளது. இது குறித்து இன்று நாடாளுமன்றத்தின் பூஜ்ய மணி நேரத்தில், முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்தத் துறைமுகத்தால், தமிழ்நாடு கடுமையாகப் பாதிக்கப்படும் என்றார். இதன் மூலம் புலிகட் ஏரியின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என்று எச்சரித்த அவர், இத்திட்டத்தால் சுமார் 30 ஆயிரம் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Intro:Body:

*ராஜ்ய சபாவில் முன்னாள் சுற்று சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் எச்சரிக்கை:*

காட்டுபலியில் அதானி துறைமுகம் கட்டப்பட்டால் சூழலியல் அழிவும் சென்னைக்கு வெள்ளம், வறட்சி மற்றும் புயல்களால் பேராபத்துகளும் ஏற்படும்.



Former Environment Minister Jairam Ramesh warns that proposal for mega port by Adani in Kattupalli will irreparably damage wetlands, and heightened Chennai region's risk of  exposure to cyclonic storms, flooding during heavy rains and storm surges, and salinity intrustion.





Translation of Statement by Former Environment Minister Jairam Ramesh in Rajya Sabha on 15.7.2019. 



அய்யா:



 அநீதி எங்கே நிகழ்ந்தாலும் அது எல்லா நீதிகளுக்கும் ஆபத்தானது என்று டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் சொன்னது மிகவும் புகழ்பெற்ற வாசகமாகும். அது இன்றைக்கும் பொருத்தம் உள்ளதாக இருக்கிறது. ஆனால், அந்த வாசகத்துடன் நாம் மற்றொன்றையும் உணர்ந்துகொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்- ஏதோ ஓர் இடத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் அழிவு அனைத்து இடங்களின் உயிர்ச்சூழலுக்கும் ஏற்படும் அபாயமாகும்.



 சந்தேகத்திற்குரிய சுற்றுச்சூழல் தகுதிகளைக் கொண்ட தனியார் கம்பெனி ஒன்று வட சென்னையில் மிகப்பெரும் துறைமுகம் ஒன்றைக் கட்டவிருக்கிறது. அப்படி அது கட்டப்பட்டால், மதிப்பிட முடியாத அலையாத்தி வன செல்வமும், உப்பு சதுப்பு நிலமும், கடலுக்கும் ஏரிக்கும் இடையில் மெல்லிய தீவு போல நீளும் அடர்ந்த பசுமை வளம் கொண்ட மணல் குன்றுகளும் அடங்கிய எண்ணூர் - பழவேற்காடு உயிர்ச்சூழல் திரும்பவும் சரி செய்ய முடியாத அளவுக்குச் சிதைந்து போகும். கடலையும் இந்தியாவின் இரண்டாவது உவர் நீர் ஏரியான பழவேற்காட்டையும் பிரிக்கும் இந்த மெல்லிய தீவு கடல் சார்ந்த இயற்கை அபாயங்களிலிருந்து பிராதான நிலப் பகுதியைக் காக்கும் இயற்கை அரண் என்பதையும் நாம் மறக்கக் கூடாது.



அழிவை ஏற்படுத்திய புயல்களிலிருந்தும், நிலத்தடி நீரில் உப்புதன்மை ஊடுருவலலிருந்தும்  காட்டுப்பள்ளி மணல் குன்றுகள் உள்நாட்டுப் பகுதிகளைக் காக்கின்றன. எண்ணூர் - பழவேற்காடு உப்பங்கழிகள் மழைநீரையும், புயலால் ஏற்படும் கடல் எழுச்சியையும் உள்வாங்கிக்கொள்கின்றன. இந்த சதுப்பு நிலத்தை ஆக்கிரமிப்பது இப்பிராந்தியத்தில் வாழும் 10 லட்சம்பேரை பேரழிவு ஏற்படுத்தும் வெள்ள அபாயத்துக்குத் தள்ளிவிடும்.



துறைமுகத்தின் அலை தடுப்பான்கள், பழவேற்காடு ஏரியையும் கடலையும் பிரிக்கும் குறுகிய இயற்கை காப்பரணை அரித்து எடுத்துவிடும். விளைவாக, ஏரியும் வங்கக் கடலும் ஒன்றாக ஆகிவிடும். பழவேற்காட்டையும் கடலையும் நம்பி வாழும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதுகாப்பும் இந்த துறைமுகத் திட்டத்தினால் அபாயத்துக்கு ஆளாகியுள்ளன.



தற்போது கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் துறைமுகத்தைக் கட்டும் திட்டத்தை மறுதலிக்கும்படியும், தமிழ்நாடு மேலும் பேரழிவுகளைச் சந்திப்பதிலிருந்து தடுத்துக் காக்கும்படியும் சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சரகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.