உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கரோனாவிற்கு பலியான முதல் அரசியல் கட்சித் தலைவர் அபய் சேத். இவருக்கு வயது 66. இவர் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி அன்று சஞ்சய் காந்தி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று உடல் நலம் தேறிவந்த அபய் நேற்று (ஜூலை 6) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர் கூறுகையில், “அபய் சேத்திற்கு முன்பே இதய நோய், நீரிழிவு நோய் இருந்தது. கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்குச் சுவாசப் பிரச்னை ஏற்பட்டது. தொடர்ந்து சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறலால் அவர் உயிரிழந்தார்” என்றார்.
அபய் சேத் பாஜகவின் அடிமட்ட தொண்டர். இவர் லக்னோவின் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பாக 2002ஆம் ஆண்டு மே முதல் நவம்பர் மாதம் வரை குறுகிய காலம் நகராட்சியில் துணை நிர்வாகியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனாவிலிருந்து மீண்ட 94 வயது பாட்டி!