கேரள மாநிலம் எர்ணாகுளம் வடட்டுபாரா கிராமத்திலிருந்த வீட்டின் பின்புறத்திலிருந்த புளியமரத்தின் மீது கருநாகம் இருப்பதாகத் தீயணைப்புத் துறையினருக்கும், காவல் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இந்தக் கருநாகம் 16 அடி நீளத்தில் இருந்தது.
அதனை மீட்பது கடினமாகயிருந்தது. குட்டம்புழா காவல் துறையினர், கோத்தமங்களத்தைச் சேர்ந்த தீயணைப்புப் படையினர், வனப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சாபு உள்ளிட்ட குழுவினர் செவ்வாய்க்கிழமை இரவு சம்பவ இடத்தை அடைந்தனர்.
பாம்பை மீட்க பாம்பு பிடிப்பவரான மார்சீன் மெய்காமலி உதவினார். சிறிய கிளைகளின் மீது கருநாகம் ஏறியதால் மீட்புப் பணி சற்று சிரமாக இருந்ததாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
கருநாகத்தை அதிகாலை 2 மணி முதலாகப் பிடிக்க முயன்று, சுமாராக 20 மணி நேரத்திற்கு பிறகு மீட்டனர். இதையடுத்து கருநாகம் கரிம்பனி காட்டில் கொண்டுவிடப்பட்டது.
இதையும் படிங்க: உத்ரா கொலை வழக்கு: பாம்பின் டி.என்.ஏ.வை பரிசோதிக்க முடிவு!