ETV Bharat / bharat

பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு இத்தனை கோடி செலவா?

டெல்லி: கடந்த ஐந்தாண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுச் பயணங்களுக்கு ரூ. 446.52 கோடி செலவாகியுள்ளதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Foreign visits of PM Modi
Foreign visits of PM Modi
author img

By

Published : Mar 5, 2020, 11:20 AM IST

கடந்த ஐந்தாண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு எவ்வளவு செலவானது என்ற கேள்வி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்து பேசிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன், கடந்த ஐந்தாண்டுகளில் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு மட்டும் ரூ. 446.52 கோடி செலவானதாகத் தெரிவித்துள்ளார்.

முரளீதரன் அளித்த தகவலின்படி, 2015-16ஆம் ஆண்டில் ரூ.121.85 கோடியும் 2016-17ஆம் ஆண்டிற்கு ரூ.78.52 கோடியும் 2017-18ஆம் ஆண்டிற்கு ரூ.99.90 கோடியும் 2018-19ஆம் ஆண்டில் ரூ.100.2 கோடியும் 2019-20ஆம் ஆண்டிற்கு ரூ.46.23 கோடியும் செலவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

பிரதமரின் சிறப்பு விமானம், அவர் தங்கும் விடுதிக்கு ஆன செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் உள்ளடக்கியது இது என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இதையும் படிங்க: ‘கொரோனாவை தடுக்க மாஸ்க் தேவையில்லை, நமஸ்காரம்தான் தேவை’ - பிரகாஷ் ஜவடேகர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.