ETV Bharat / bharat

சீன அதிபரை சந்திக்க மாமல்லபுரத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்? - வெளியுறவுச் செயலர் விளக்கம் - Modi Xi summit

சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரத்தில் சந்தித்தது ஏன்? என்ற கேள்விக்கு வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே பதில் அளித்தார்.

Vijay Gokhale
author img

By

Published : Oct 12, 2019, 2:32 PM IST

Updated : Oct 12, 2019, 4:27 PM IST

அதிபர்- பிரதமர் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரம் அருகேயுள்ள கோவளம் கடற்கரை அருகே உள்ள தாஜ் ஓட்டலில் நடந்தது. இதையடுத்து இருநாட்டுக் குழுவினரும் சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

இருநாட்டுத் தலைவர்களும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தனர். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கலாசார உறவு உள்ளது. பருவநிலை குறித்து இருநாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர். வர்த்தகம் தொடர்பான நடைமுறைகளுக்காக இரு நாடுகளும் தங்களது நுழைவு இசைவு (விசா) கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளது.

சென்னையில் தூதரகம்

சென்னையில் சீன தூதரகம் அமைப்பது தொடர்பாக ஏற்கனவே புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துவருகிறது. காஷ்மீர் உள்நாட்டு விவகாரம் என ஏற்கனவே தெளிவுப்படுத்தி உள்ளோம். சீனா-இந்தியா இடையே எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்துவருகிறது.

வர்த்தகப் பற்றாக்குறை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே அடுத்தடுத்த சந்திப்புகள் நடைபெறவுள்ளன. பாதுகாப்புத் துறை குறித்து தலைவர்கள் நேரடியாக பேசும் வழக்கம் கிடையாது. இருநாட்டு ராணுவத்துக்கும் இடையேயான விரிசலை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு சீனா செல்லும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க தயாராக இருப்பதாக அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார். இவ்வாறு விஜய் கோகலே பேசினார்.

மாமல்லபுரம் ஏன்?

இதையடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு விஜய் கோகலே பதிலளித்தார். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர், மாமல்லபுரத்தை தேர்ந்தெடுத்த காரணம் என்ன? நதி, எல்லைப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தீர்களா? என்ற கேள்வியை எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கோகலே, “இந்திய-சீனா வர்த்தக உறவில் சிக்கலில்லை. மாமல்லபுரம் உலக பிரசித்திப்பெற்ற கலாசார பெருமைகளைக் கொண்டது. சீனா- மாமல்லபுரம் இடையே நீண்ட கலாசார உறவு இருக்கிறது. இதனை பிரதமர் மோடி அறிந்து வைத்திருந்தார்.

இதனால் சீன அதிபர் உடனான சந்திப்பு சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். நதி நீர், எல்லைப் பிரச்னையில் இரு நாடுகள் தரப்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது” என்றார்.

இதையும் படிங்க

பிரதமரைக் காண காரில் புறப்பட்டார் அதிபர் ஜி ஜின்பிங்

Intro:Body:

Foreign Secy Vijay Gokhale: The two leaders today had a conversation for almost 90 minutes,followed by delegation level talks and then lunch was hosted by PM Modi. A total of 6 hours of one to one meeting was held between the two leaders during this summit. #Modixijinping

Conclusion:
Last Updated : Oct 12, 2019, 4:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.