கேரள சட்டப்பேரவையில் அம்மாநிலத்தின் பட்ஜெட் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் ஆவணத்தின் முகப்பில் அம்மாநில ஓவியர் ஒருவர் வரைந்த 'காந்திப் படுகொலை' ஓவியத்தை பதிவிட்டவாறு, அம்மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையைத் தொடங்கும் முன்பு, நிதியமைச்சர் தாமஸ் ஐசக் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றைத் தாக்கிப் பேசினார்.
இதுகுறித்து பேசிய ஐசக்,"காந்தி படுகொலை ஓவியத்தை முகப்பில் இட்டதன் மூலம் நாங்கள் ஒன்றை தெரிவித்து கொள்கிறோம். இன்று மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் கொண்டாடும் மதவாதிகளால்தான் காந்தி கொல்லப்பட்டார். காந்தியைக் கொலை செய்தவர்களை நாங்கள் மறக்கவில்லை. மக்களும் மறக்கமாட்டார்கள்.
தற்போது, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம், இனி கொண்டுவரவுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்கள் மக்களை பிளவுபடுத்தக் கூடியவை" என்றார். மாநில பட்ஜெட்டின் முகப்பில் காந்தி படுகொலை ஓவியம் பதிவிட்டவாறு பட்ஜெட் தாக்கல் செய்த சம்பவம் இந்திய அளவில் ஒரு விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் நடத்தை விதிகளை மீறிய கேஜ்ரிவால் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!