ETV Bharat / bharat

எத்தனை நாள் இந்தியாவை விலக்கி வைத்திருப்பீர்கள்? - ஐநாவிடம் கேள்வி எழுப்பும் மோடி!

முடிவெடுக்கும் சக்தி வாய்ந்த அமைப்புகளிலிருந்து இந்தியாவை எத்தனை நாள்தான் ஐநா விலக்கி வைத்திருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

author img

By

Published : Sep 26, 2020, 8:11 PM IST

Updated : Sep 26, 2020, 9:35 PM IST

UNGA
UNGA

ஐக்கிய நாடுகள் பொது சபையின் 75ஆவது கூட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு நாட்டின் தலைவர் கடந்த சில நாட்களாக உரையாற்றிவருகின்றனர். இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட காணொலி உரை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொது சபையின் வளாகத்தில் ஒளிபரப்பப்பட்டது.

அதில் அவர் பேசியதாவது, உலக நலனுக்காக ஐக்கிய நாடுகள் சபை உறுதியுடனும், ஸ்திரத்தன்மையுடனும் செயல்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியதற்கான தருணம் இது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை எத்தனை நாள்கள் விலக்கி வைத்திருப்பீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக வரும் ஜனவரி முதல் இந்தியா பங்காற்றவுள்ளது. இதற்கு உதவிய அனைத்து நாடுகளுக்கும் இந்தியா சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

உலகில் அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றை நிலைநிறுத்த இந்தியா பாடுபடும். பயங்கரவாதம், ஆயுதக் கடத்தல், போதைப் பொருள், பணமோசடி ஆகிய விவகாரங்களை கையாள்வதில் இந்தியா உறுதியான தன்மையுடன் செயல்படும்.

வளர்ந்த நாடுகளின் மேம்பாட்டிற்கு இந்தியாவின் பண்பாடு, கலாசாரம், நீண்ட பாரம்பரிய அனுபவம் உதவும். இந்தியாவின் நட்பு அரவணைப்பான செயல்பாடு எந்த நேரத்திலும் குறுகிய லாபத்தை எதிர்நோக்கி செயல்படாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு இந்தியா நீண்ட நாட்களாக முயற்சி செய்துவருகிறது. இதற்கு ஐநா காலம் தாழ்த்தி வருவதை குறிப்பிடும் விதமாகவே, பிரதமர் மோடி மறைமுகமாக இக்கூட்டத்தில் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல்: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் வாய்ப்பில்லை

Last Updated : Sep 26, 2020, 9:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.