கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் வரை கட்டுக்குள் இருந்த கரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், கரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த நிலவரத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ள அம்மாநில அரசு ஒரு புது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதன்படி பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் அனில் குமார் ட்விட்டரில் ஒரு இணைப்பைப் பகிர்ந்துள்ளார். இந்த '' https://t.co/4N0Re74NeX '' என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் பொதுமக்கள் அருகிலுள்ள கரோனா மையங்களைக் கண்டறியலாம்.
இது மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எல்லையில் அமைதி திரும்புமா?