ETV Bharat / bharat

நாட்டுப் புறக்கலைஞர் முகமது நிசார் மரணத்தில் சந்தேகம்? - முகமது நிசார்

ஹைதராபாத்: தெலங்கானா நாட்டுப்புற கலைஞரும் பாடகருமான முகமது நிசார், கரோனா பாதிப்பால் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

mohammad nissar
mohammad nissar
author img

By

Published : Jul 9, 2020, 10:40 AM IST

கரோனா குறித்து விழிப்புணர்வு பாடல்களை பாடி மக்களின் அச்சத்தை போக்கியவர் முகமது நிசார். நாட்டுப்புற கலைஞரான இவர், தான் எழுதும் பாடல்களுக்கு மெட்டுக்களை உருவாக்கி அவரே பாடும் வல்லமை கொண்டவராக திகழ்ந்தார். மக்களின் ரசனைக்கேற்ற பாடல்களை பாடி ரசிக்க வைப்பார்.

தெலங்கானா மாநில போக்குவரத்துக் கழக (டி.எஸ்.ஆர்.டி.சி) பணியாளர்கள் சங்கத்தில் அலுவலக பொறுப்பாளராக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை 7ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக முகமது நிசார் உயிரிழந்தார். அவரது மரணத்தில் பல குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், தெலங்கானா அரசை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை இரவு நிசாருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் நிசாரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சித்தபோது, அங்கு அனுமதி மறுக்கப்பட்டது என தொழிற்சங்க பொதுச் செயலாளர் ராஜி ரெட்டி தெரிவித்தார்.

இந்தச் சிக்கலான நேரத்தில் வென்டிலேட்டர் கிடைக்காததால் நிசார் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ஏற்க மறுத்த காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா ராவ், மருத்துவ வசதியில் நோயாளிகளுக்கு 200க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்கள் உள்ளன என்றார். அவரது மறைவுக்கு தெலங்கானா நிதி அமைச்சர் ஹரிஷ் ராவ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கேரளாவில் 301 பேருக்கு கரோனா பாதிப்பு: 169 ஹாட்ஸ்பாட் பகுதிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.