ETV Bharat / bharat

LIVE UPDATE: விவசாயி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறுவணிகர்களுக்கு திட்டங்கள் - பொருளாதார நிதித் தொகுப்பு

FM Nirmala Sitharaman Meets Reporters again @4PM  நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பு  நிர்மலா சீதாராமன்  பொருளாதார நிதித் தொகுப்பு  ரூ.20 லட்சம் கோடி திட்டம்

author img

By

Published : May 14, 2020, 3:51 PM IST

Updated : May 14, 2020, 5:26 PM IST

17:11 May 14

2ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பு நிறைவு

ரூ.20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார திட்டம் தொடர்பான நிதியமைச்சரின் இரண்டாவது நாள் செய்தியாளர் சந்திப்பு நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

17:09 May 14

கிஸான் கிரெடிட் கார்டு

கிஸான் கிரெடிட கார்டு திட்டங்களில் மீனவர்கள் மற்றும் பண்ணை தொழிலாளர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்தத் திட்டத்தின் மூலம் 2.5 கோடி பேர் பயனடைவார்கள். இதன் மூலம் ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.

17:03 May 14

வேலைவாய்ப்பு

  • வேலைவாய்ப்பை உருவாக்க ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • நபார்டு வங்கி மூலம் சிறு விவசாயிகள் பயனடையும் வகையில் 30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு. இந்த கடன் கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்கப்படும்.
  • சிஏஎம்பிஏ திட்டத்தின் மூலம் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்.

16:58 May 14

வீட்டுக்கடன் மானியக் கடன்

ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை கொண்ட நடுத்தர வருவாய் கொண்ட குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் வீட்டுக்கடன் மானியக் கடன் வழங்கப்படும். இதனால் 3.3 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.  இந்தத் திட்டத்துக்கு ரூ.70 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் நடப்பு நிதியாண்டில் 2.5 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள்.

வீட்டுக்கடன் மானியத் திட்டத்தால் இரும்பு, சிமெண்ட், போக்குவரத்து உள்ளிட்டவற்றிலும் வளர்ச்சி ஏற்படும். இந்த திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படும். இத்திட்டத்துக்கு ரூ.70 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.

16:55 May 14

சாலையோர வியாபாரிகள் கடன் திட்டம்

சாலையோர வியாபாரிகள் கடன்பெறும் வகையில் விரைவில் திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.10 ஆயிரம் தொடக்க செயல்பாட்டு மூலதனத்துடன் கடன் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் பயன்பெறுவார்கள். இந்தத் திட்டத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

16:51 May 14

முத்ரா திட்டம்-ஷிசு கடன்

முத்ரா- ஷிசு கடன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1500 கோடி வரை நிவாரணம் வழங்கப்படும். இத்திட்டத்தில் ஏற்கனவே 1.62 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 12 மாதங்கள் தவணை தொகையை செலுத்தினால், 2 விழுக்காடு மானியம் வழங்கப்படும். இந்தச் சலுகை முத்ரா- ஷிசு திட்டத்துக்கு மட்டும் வழங்கப்படும்.

  • ரூ.50 ஆயிரம் குறைவான முத்ரா கடன் பயனாளிகளுக்கு வட்டி 2 சதவீதம் குறைப்பு.
  • ரூ.1500 கோடி ஒதுக்கீடு.

16:48 May 14

வாடகை வீடு நிறுவனங்களுக்கு மானியம்

குறைந்த விலையில் வீடுகள் வாடகைக்கு கொடுக்கும் நிறுவனங்களுக்கு மானியங்கள வழங்கப்படும். மேலும் அரசு-தனியார் பங்களிப்பில் வீடுகள் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் அடிப்படையில் பயன்படாத அரசு கட்டடங்கள் அரசு-தனியார் பங்களிப்புடன் வாடகை குடியிருப்புகளாக மாற்றப்படும்.

16:45 May 14

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். இந்தத் திட்டத்தில் 23 மாநிலங்கள் இணைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்துக்குள் 83 விழுக்காடு மக்கள் பயனடைவார்கள். 

16:40 May 14

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுத் திட்டம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கும் திட்டம். அதன்படி அனைத்து வெளிமாநில தொழிலாளர்களுக்கும் இரண்டு மாதம் உணவுப் பொருள்கள் விலையில்லாமல் வழங்கப்படும். இத்திட்டத்தின்படி ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். இதற்கான செலவை மத்திய அரசு ஏற்கும்.

இந்த திட்டத்தின் கீழ் 8 கோடி வெளிமாநில தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். ரேஷன் கார்டு இல்லாதவர்களும் இத்திட்டத்தில் கீழ் பயனடையலாம். இதற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு.

16:33 May 14

இரவு பணி- பெண்களுக்கு அனுமதி

  • குறைந்தபட்சம் 10 தொழிலாளர்கள் இருந்தாலும் அந்த நிறுவனத்தில் இஎஸ்ஐ திட்டம்.
  • உரிய பாதுகாப்புடன் அனைத்து நிறுவனங்களிலும் இரவு நேர பணிகளில் பெண்கள் ஈடுபடலாம்.
  • சமுதாய பாதுகாப்பு திட்டத்தில் சாலையோர வியாபாரிகள் சேர்ப்பு.
  • தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கிடைக்க ஏற்பாடு.
  • ஐந்து ஆண்டுகளுக்கு பதில் ஓராண்டு பணியாற்றினாலும் தொழிலாளர்களுக்கு பணிக்கொடை கிடைக்க ஏற்பாடு.

16:22 May 14

வேலைவாய்ப்பு திட்டங்கள்

12 ஆயிரம் மகளி்ர் சுய உதவிக் குழுக்கள் மூலம் 3 கோடி முகக்கவசங்கள், 1.20 லட்சம் லிட்டர் சானிடைசர்கள் வழங்கப்பட்டுள்ளது.

  • மே 13ஆம் தேதி முதல் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலைகள் வழங்கப்பட்டுவருகிறது. ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் தற்போதைய செலவு ரூ.10 ஆயிரம் கோடி. நேற்று மட்டும் 16.62 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • வெளிமாநிலங்களிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்களுக்கும் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை வாய்ப்புகள் அளிக்கும் பணிகள் தொடங்கியது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியம் ரூ.182ல் இருந்து ரூ.202 ஆக உயர்வு.
  • கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது இந்தாண்டு 40-50 விழுக்காடு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • தேசிய அளவில் ஒரே அளவில் ஊதியம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • வெளிமாநில தொழிலாளர்கள் பயன்பெறும் வகையிலும் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • மார்ச் 15ஆம் தேதிக்கு பின்னர் 7 ஆயிரத்துக்கும் மேம்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைப்பு.

16:06 May 14

விவசாயக் கடன்

நபார்டு வங்கியின் மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு ரூ.29,500 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் முதல் வேளாண் திட்டங்களுக்கு மாநில அரசுகளுக்கு ரூ.6,700 கோடி வழங்கப்பட்டுள்ளது. பேரிடர் நிதியிலிருந்து ரூ.11002 கோடி மாநில அரசுகளுக்கு முகாம்கள் அமைக்க வழங்கப்பட்டுள்ளது.

16:04 May 14

நிர்மலா சீதாராமன் உரை

வெளிமாநில தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு இன்று திட்டங்கள் அறிவிக்கப்படும். இதில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு மூன்று திட்டங்களும், விவசாயிகளுக்கு இரண்டு திட்டங்களும் அறிவிக்கப்படும். இந்தத் திட்டங்கள் பிரதமரின் தன்னிறைவு இந்தியா திட்டத்தின் கீழ் இருக்கும். ஒட்டுமொத்தமாக இன்று ஒன்பது திட்டங்கள் அறிவிக்கப்படும்.

ஏற்கனவே 4.22 லட்சம் கோடிக்கு கடந்த மூன்று மாதங்களில் விவசாயிகளுக்கு கடன் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடன் செலுத்த வேண்டிய காலக்கெடு மார்ச் 1ஆம் தேதியிலிருந்து மே30ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் ரூபாய் கடன் வரம்புடன் சுமார் ரூ.25 லட்சம் வரை விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கப்படும்.

இதேபோல் சாலையோரக் கடைகளுக்கான அறிவிப்பும் இன்று வெளியாகவுள்ளது. விவசாயிகளுக்கு ரூ.4 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். கடன் ஒத்திவைப்பு திட்டத்தின் கீழ் 3 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மூன்று வேளையும் உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

15:27 May 14

செய்தியாளர் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்களில், ரூ.3.60 லட்சம் கோடிக்கான திட்டங்களை நேற்று (மே13) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2ஆவது நாளாக பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்கள் குறித்து பேசினார்.

நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்த திட்டங்களில் சிறு, குறு நிறுவனங்களுக்கு பிணையில்லாத கடன், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மூன்று மாதம் காலஅவகாசம் நீட்டிப்பு, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி மூலதன முதல், மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டிருந்தது.

Last Updated : May 14, 2020, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.