கரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள், 'வந்தே பாரத்' திட்டத்தின் மூலம் தாய் நாட்டிற்கு அழைத்துவரப்படுகிறார்கள்.
அதன்படி செவ்வாய்க்கிழமை (ஜூன்2) இரவு துபாயிலிருந்து சண்டிகர் சர்வதேச விமான நிலையத்திற்கு, ஏ.ஐ 1916 ஏர் இந்தியா விமானம் மூலம் 153 இந்தியர்கள் நாடு திரும்பினர்.
அவர்களுள் 80 பேர் பஞ்சாப்பையும், 37 பேர் இமாச்சலப் பிரதேசம், 13 பேர் ஹரியானா, 11 பேர் சண்டிகரை சேர்ந்தவர்கள். மேலும் தலா நான்கு பேர் டெல்லி மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
மற்ற நால்வரில் தலா இருவர் உத்தரகண்ட் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து வந்தே பாரத் திட்டம் மூலம் ஜூ 13ஆம் தேதி வரை இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள் மூலம் 47 நாடுகளில் இருந்து இந்திய பயணிகள் நாடு திரும்ப உள்ளனர்.
இதற்கு முன்பு 244 இந்தியர்கள் அமெரிக்காவின் நியூயார்கிலிருந்து அழைத்து வரப்பட்டனர்.
இதையும் பாருங்கள்: மும்பையை பந்தாடிய நிசார்கா!