ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது, தனக்கு எதிராக பொய்யான புகாரை குடிமைப் பணி அலுவலர்கள் பதிவுசெய்ததாகவும் இதானல் தான் பாதிக்கப்பட்டதாகவும் பெண் ஒருவர் நீதிமன்றத்தில் புகாரளித்தார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் துறையிடம் அறிவுறுத்தியது. அதன்படி குடிமைப் பணி அலுவலர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து காவல் துறை மூத்த அலுவலர் கூறுகையில், "பொய்யான புகாரின் அடிப்படையில் தான் கைதுசெய்யப்பட்டதாகப் பெண் ஒருவர் புகாரளித்தார். மேலும், இது குறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தபோது, தனக்கு எதிராக பொய்யான தகவல்களை குடிமைப் பணி அலுவலர்கள் தாக்கல் செய்ததாகவும் அந்தப் பெண் புகாரளித்தார்" என்றார்.
மூத்த ஐஏஎஸ் அலுவலர் ஒருவர் அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னை பழிவாங்கியதாக அப்பெண் புகாரளித்துள்ளார். இது தொடர்பாக மூன்று முன்னாள் ஐஏஎஸ் அலுவலர்கள் மீதும் இரண்டு ஐபிஎஸ் அலுவலர்கள் மீதும் கடந்த ஜனவரி 9ஆம் தேதி இந்திய தண்டனைச் சட்டம் 120B, 193 ஆகிய பிரிவுகளின் கீழ் சைஃபாபாத் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: 'பிரித்தாலும் சூழ்ச்சியைக் கைவிடுங்கள் மோடி' - காங்கிரஸ்