ETV Bharat / bharat

சௌதி அரேபியாவில் இந்தியர்களின் நிலை - ஒரு அலசல்

author img

By

Published : Apr 20, 2020, 11:46 AM IST

டெல்லி: உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சௌதி அரேபியாவில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து மூத்த செய்தியாளர் ஸ்மிதா ஷர்மா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

http://10.10.50.80:6060//finalout3/odisha-nle/thumbnail/19-April-2020/6854770_66_6854770_1587289405329.png
COVID

கரோனா பாதிப்பின் காரணமாக சௌதி அரேபியாவில் வசிக்கும் ஐந்து இந்தியர்கள் தற்போது உயிரிழந்திருப்பது உறுதியாகியுள்ளது. சௌதி தலைநகர் ரியாதில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம், இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த இருவர், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேரந்த தலா ஒருவர் உயிரிழந்தனர். சுமார் 20 லட்சம் இந்தியர்களைக் கொண்டுள்ள சௌதி அரேபியாவில் பெரும்பாலானோர் சுரங்கத்துறையில் பணியாற்றிவருகின்றனர்.

சௌதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களை தொடர்ச்சியாக கண்காணித்துவரும் இந்திய தூதரகம், அவர்களுக்கு பாதிப்பு நிகழாத வண்ணம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக இந்திய தூதர் ஔசப் சயித் தெரிவித்துள்ளார். மேலும் தூதரகம் சார்பில், உதவி தொலைபேசி எண் (+966546103992) , மின்னஞ்சல் முகவரி (covid19indianembassy@gmail.com) வழங்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு வசிக்கும் மருத்துவர்களைக் கொண்டு வாட்ஸ்-ஆப் குழு அமைக்கப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியர்களின் உணவுத் தேவைக்கான தகவல்கள் தொடர்சியாக அளிக்கப்படுகின்றன. தேவைப்படும் பட்சத்தில் தங்கும் வசதிகள் ஏற்பாடும் தயார் நிலையில் உள்ளது.

53 நாடுகளில் வசிக்கும் 3 ஆயிரத்து 300 வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், அவர்களில் 2 ஆயிரத்து 100 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 300க்கும் மேற்பட்டோர் ஈரான் நாட்டில் வசிப்பவர்கள். வளைகுடா நாடுகளில் வசிக்கும் 80 லட்சம் இந்தியர்களில் பெரும்பாலானோர் திறன் சார் வேலையாட்களே.

அவர்களின் பணிச்சூழல் பாதுகாப்பானதா, சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுகிறார்களா என்ற விவரங்களை இந்திய தூதரகம் கண்காணித்துவருகிறது. இத்தகைய சிக்கல் மிக்கச் சூழலில், இந்திய தூதரகம் சுய ஒழுங்குடன், பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவர்களின் கடமை என தூதரகம் சார்பில் வலியுறுத்தப்படுகிறது. எனவே கூட்டமாக கூடுவது, வீடுகளிலிருந்து தேவையில்லாமல் வெளியேறுவது உள்ளிட்ட விதிமீறலை மேற்கொள்கிறது.

இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாண்டியும் வளைகுடா நாடுகளில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. வளைகுடா நாடுகளில் இதுவரை 17 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதில் 4 ஆயிரத்து 500 பேர் சௌதி அரேபியாவில் உள்ளனர். இதுகுறித்து, சௌதி அரேபிய சுகாதாரத்துறை அமைச்சர் தவ்பிக் அல் ரபியா தலைமையில் சிறப்புக் குழு ஒன்று கடந்த வாரம் அமைக்கப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொடர்பு கொண்டு பேசிய சௌதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் இருநாடுகளும் ஒன்றிணைந்து இந்தச் சூழலை எதிர்கொள்வோம் என உறுதியளித்துள்ளனர். அங்கு வசிக்கும் இந்தியர்களை நாட்டிற்கு அழைத்துவர வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அரசு தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்தியாவில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச விமான சேவை எப்போது தொடங்கும் என்ற விவரம் இதுவரைத் தெரிவிக்கப்படவில்லை. எனவே சூழல் சீரடையும் பட்சத்தில், இந்திய தூதரக தொழிலாளர்களை தொடர்பு கொண்டு உரிய சேவைகளை செய்து தரும் என இந்திய தூதுவர் ஔசப் சயித் உறுதியளித்துள்ளார். அதுவரை இந்தியர்களின் சுகாதார நலன், பொருளாதார நலனை இந்திய தூதரகம் உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவில் உள்ள 4 கோடி குழந்தைகள் லாக்டவுனால் பாதிப்பு - யுனிசெப் அமைப்பு தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.