மகாராஷ்டிரா மாநிலத்தில், அரசு உள்ளாட்சி அமைப்புகளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர்.
இந்நிலையில், மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிப்ரவரி 29ஆம் தேதி முதல் அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு வாரம் ஐந்து நாள் வேலையை அறிவித்துள்ளது.
மேலும், இதர பிற்படத்தப்பட்டோர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்புகள் ஆகியவை இனி 'பகுஜன் கல்யாண் துறை' என்றழைக்கப்படும் என்ற முடிவும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி