ETV Bharat / bharat

கங்கை நதியில் உள்ள பாக்டீரியோபேஜ்கள் கரோனாவை அழிக்குமா... 5 பேராசிரியர்கள் ஆய்வு! - கரோனா வைரஸ்

வாரணாசி: பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஐந்து பேராசிரியர்கள், கங்கை நிதியிலுள்ள பாக்டீரியோபேஜ்களால் வைரஸை அழிக்க முடியுமா என்பது தொடர்பான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

கங்கை
கங்கை
author img

By

Published : Jun 8, 2020, 8:12 PM IST

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (BHU) பணியாற்றும் ஐந்து பேராசிரியர்கள் குழுவினர் , கங்கையிலிருந்து வரும் நீரில் உள்ள பாக்டீரியோபேஜ்களால் கரோனா வைரசை அழிக்க முடியுமா என்பதை கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து நரம்பியல் நிபுணரும் முன்னாள் மருத்துவ அலுவலரான விஜயநாத் மிஸ்ரா கூறுகையில், " கங்கை நீரில் பாக்டீரியோபேஜ் வைரஸ் இருப்பது சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. பேஜ் தெரபி என்று அழைக்கப்படும் ஒரு சிகிச்சையில் பாக்டீரியோபேஜ் பயன்படுத்தி தான் நோய்கள் குணமாக்கப்படுகின்றன.

மார்ச் 2020இல் வெளியான ஆய்வுக் கட்டுரையில், பேஜ்களின் நானோ துகள்களை உருவாக்குவதன் மூலம் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் செயல்பாடுகளைத் தடுக்க முடியும் எனக் குறிப்பிட்டிருந்தனர். இதனால், கரோனா வைரசையும் பாக்டீரியோபேஜ் வைரஸ் மூலமாக அழிக்க வாய்ப்புள்ளது.

கங்கை நதியில் உள்ள பாக்டீரியோபேஜ்கள் கரோனாவை அழிக்குமா?

தேசியளவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோரின் விழுக்காடை ஒப்பிடுகையில் கங்கை கரையோரங்களில் கரோனா வைரஸ் மீட்பு விகிதம் அதிகமாக உள்ளது. எனவே, கங்கை நீரைக் கொண்டு கரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சையளிக்க முடியுமா என்பதை அரசாங்கம் முன்வந்து மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

இவர் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட 5 பேர் குழுவில் ஒருவராவர். இதற்கு முன்னதாக, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் யு.கே.சவுத்ரி, கங்கை நிதியில் உள்ள பாக்டீரியோபேஜ்கள் மூலம் கரோனாவை அழிக்க முடியும் என்றும், அதற்கான மருத்துவ ஆராய்ச்சிகளை நடத்த வேண்டும் என, மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் (ஐ.சி.எம்.ஆர்) கடிதம் ஒன்றை எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.