ஏமன் நாட்டுப் பதிவு எண்ணுடன், லட்சத்தீவு கடற்பகுதியில் ஒன்பது நபர்களுடன் படகு ஒன்று இருந்ததைக் கண்ட கப்பற்படையினர், அந்நபர்களுடன் படகை சிறை பிடித்து கொச்சி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். மேற்கு கொச்சியின் கடல் அளவில் 100 நாட்டிகல் தொலைவில், இந்தப் படகு இருந்துள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதிலிருந்த நவுஷத், நிசார் ஆகிய இருவர் கேரள மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மேலும் அதிலிருந்த வின்ஸ்டன், ஆல்பர்ட் நியூடன், எஸ்கலின், அமல் விவேக், சகாய ராஜன், சாஜன், சகார ரவிக்குமார் ஆகியோர் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காவல் துறை மேற்கொண்ட விசாரணையில், ' இவர்கள் ஏமன் நாட்டில் வேலை பார்த்து வந்துள்ளனர். அங்கு 11 மாதங்களாக இவர்களுக்கு ஊதியம் வழங்காமல் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டதால் தப்பித்து வந்தோம்' எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: