புதுச்சேரி வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் மத்திய அரசை கண்டித்து மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது தேசிய மீன்வள கொள்கை வரைவு அறிக்கை 2020, கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிப்பாணை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை ஆகியவற்றை எதிர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள், மீனவ பெண்கள் கடலில் இறங்கி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
கடற்கரையில் வாழும் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை தடுக்கும் தேசிய மீன்வள கொள்கை வரைவு உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.