தேசிய மீனவர் பேரவைத் தலைவர் இளங்கோ புதுச்சேரி ஆம்பூர் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 'மீனவர்களின் டீசல் செலவினத்தில் ஒரு பகுதியைக் குறைக்கும் வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் கண்டுபிடித்துள்ள கருவி, டீசல் உபயோகத்தில் 20 விழுக்காடு குறைத்துள்ளது என்பதை சென்னை, புதுச்சேரி, ராமேஸ்வரம் என பல்வேறு பகுதி மீனவர்களின் விசைப்படகுகளில் பொருத்தி அதன் பயன்பாட்டை உறுதி செய்துள்ளோம்.
மேலும், அதனடிப்படையில் ஆழ்கடல் மீன்பிடிப்பு, தங்கு கடல் மீன் பிடிப்பு, தினசரி மீன்பிடிப்பு ஆகிய அனைத்து தரப்பு மீன்பிடிப்புகளுக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இக்கருவியை மீனவர்கள் வாங்க 50 விழுக்காடு மானியத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்கவேண்டும்' என அவர் வலியுறுத்தியுள்ளார்.