காந்திநகர்: சபாநாயகர்கள் கருத்தரங்கம் நவம்பர் 24ஆம் தேதி தொடங்கி, 26ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு ஒற்றுமை சிலை அமைந்திருக்கும் பகுதியில் நடக்கிறது.
இதில் மாநில சபாநாயகர்கள், செயலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இந்தக் கருத்தரங்கில், சட்டப்பேரவை பணிகள், செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகின்றன.
இந்நிகழ்ச்சியை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னின்று நடத்துவார். இந்த மாநாட்டில் அனைத்து மாநில சபாநாயகர்களும் கலந்துகொள்ள உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கருத்தரங்கை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார்.
இதையும் படிங்க: “குடும்ப கட்சிகளால் ஜனநாயகத்துக்கு ஆபத்து”- பிரதமர் நரேந்திர மோடி