நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக மத்திய உள் துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் 2021ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, பத்து வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் இந்தாண்டே தொடங்க வேண்டும்.
இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறவிருந்த முதற்கட்ட கணக்கெடுப்புப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் இந்தாண்டு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய நடவடிக்கையான இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளில் சுமார் 30 லட்சம் அலுவலர்கள் வீடுதோறும் சென்று ஈடுபடவுள்ளனர். இதற்கான செலவு ரூ.8,754 கோடியாக வரையறை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் ஐ.எஸ். செயல்பாடுகள் அதிகம்' - மத்திய அரசு