முதல் குளோபல் சேலன்ஜ் 2019 (Global Challenge) போட்டி துபாயில் வரும் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 193 நாடுகள் சார்பில் 2 ஆயிரம் பேர் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. இந்தியா சார்பில் கியர்டு அப் கேர்ள்ஸ் ( Geared-Up Girls) என்ற மும்பையைச் சேர்ந்த இளம் பெண்கள் அணி கலந்து கொள்கின்றனர். இவர்கள் 14 முதல் 18 வயது வரை உள்ள மும்பையின் வெவ்வேறு பள்ளிகளில் படிக்கும் ஐந்து மாணவிகள் ஆவர்.
கடல்களைச் சுத்தம் செய்யும் ரோபோக்களை உருவாக்குவது, இந்தப் போட்டியின் முக்கிய கருவாகும். அதன் படி கியர்டு அப் கேர்ள்ஸ் அணியினர் தங்களின் ரோபோவை தற்போது உருவாக்கி வருகின்றனர். பெண்கள் மட்டுமே உள்ள அணி குளோபல் சேலன்ஜ் போட்டியில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை ஆகும்.
இதையும் படிங்க:கீழடி களத்தில் புதிய வரலாறு படைக்கும் தொல்லியல் மாணவிகள்