தெலங்கானா: மாநிலத்தின் முதல் கேபிள் பாலம் ஜூலை மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என கட்டுமான அலுவலர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
பாலத்தைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிக்காமல் எல்&டி கட்டுமான நிறுவனத்தால் கேபிள் பாலம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலம் வேலை நிறைவடைந்தால் மாதாபூர் - ஜூப்ளி ஹில்ஸ் இடையேயான பயண தூரம் வெகுவாகக் குறையும்.
இது வெறும் இரண்டு தூண்களின் ஆதரவோடு தான் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பாலத்தின் நீளம் மட்டும் 426 மீட்டர், அணுகுமுறைகளுடன் இது 736 மீட்டர் வரை இருக்கும். இந்த பாலம் 184 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது.
8 நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள் வகுத்த தொழில்நுட்பம் பாலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என எல்&டி கூறியுள்ளது.