ETV Bharat / bharat

ஜம்மூ காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை - ஜம்மூ காஷ்மீர் கவுன்சில் தேர்தல்

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற இறுதி கட்ட மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் 51 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று(டிச.22) காலை முதல் நடைபெறவுள்ளது.

First democratic exercise in jammu and kashmir

author img

By

Published : Dec 22, 2020, 6:32 AM IST

ஸ்ரீநகர்: ஜம்மூ காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று(டிச.22) நடைபெறுகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்றன.

அதனுடன் சேர்த்து உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. ஜம்முவில் 15 தொகுதிகள், காஷ்மீர் பிராந்தியத்தில் 13 தொகுதிகள் என, மொத்தம் 28 மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 168 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதுதவிர உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர் பதவிகள் தவிர, மீதமுள்ள பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. 84 பஞ்சாயத்து தலைவர்கள், 285 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் 6.40 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்கள் வாக்களிப்பதற்காக, 1,703 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி), மக்கள் மாநாடு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியை உருவாக்கி முதல் முறையாக தேர்தலை சந்திக்கின்றன.

தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரசும் களத்திலுள்ளன. இச்சூழலில், ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சிலின் இறுதிக்கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 51 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. மொத்தம் உள்ள 280 மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இன்று (டிச.22) எண்ணப்படவுள்ளன. கரோனா நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்பட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.