ஒடிசாவில் பெய்து வரும் கனமழையால் கடந்த ஒரு மாத காலமாக அங்கு தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.
இதில், நயாகர் மாவட்டத்தின் சாமுண்டியா கிராமத்தில் கர்ப்பிணி ஒருவர் வெள்ளத்தில் சிக்கியிருந்த நிலையில், அவரை மீட்பதற்காக மண்டல மேம்பாட்டு அலுவலர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து அவரை மீட்க தீயணைப்புத் துறையினர் சென்றனர்.
அவர்களுடன் மருத்துவக் குழுவினரும் உடன் சென்ற நிலையில், கர்ப்பிணி சிக்கியிருந்த இடத்திலேயே மருத்துவக் குழுவினரின் உதவியுடன் அவருக்கு அழகிய குழந்தை பிறந்தது. அதைத் தொடர்ந்து, படகு மூலம் பாதுகாப்பான பகுதிக்கு தாயும், சேயும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வுகளுக்கு பதிலாக பொம்மைகள் குறித்து பிரதமர் விவாதிப்பதாக ராகுல் விமர்சனம் !