ETV Bharat / bharat

சாலையில் விழுந்து சிதறிய மூட்டைகள் - சுத்தம் செய்த தீயணைப்புத் துறை! - புதுச்சேரி மாநிலம்

புதுச்சேரி: வேனில் இருந்து மூட்டைகள் கீழே சரிந்து சாலையில் விழுந்ததால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். பின்னர் அதனை தீயணைப்புத் துறையினர் தூய்மைப் படுத்தினர்.

Fire department cleaned up the bundles that had fallen on the road

author img

By

Published : Aug 24, 2020, 3:52 PM IST

புதுச்சேரி வியாபாரி ஒருவர் மினிவேனில் மூட்டைகளைத் தனது வாடிக்கையாளர்களின் கடைகளுக்கு வழக்கம்போல் இன்று (ஆகஸ்ட் 24) விநியோகம் செய்து வந்தார். வேன் புதுச்சேரி ராஜிவ் காந்தி சிக்னல் அருகே வந்தபோது‌, வளைவில் ஏற்றி வந்த முட்டைகள் கீழே விழுந்து, அந்தப் பகுதிகளில் மூட்டைகள் உடைந்து சாலையில் கொட்டியதால், அப்பகுதியில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறினர்.

இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

உடனடியாக, போக்குவரத்துத்துறை காவலர்கள், தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் சாலையில் உடைந்த முட்டைகளை தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தண்ணீரால் சுத்தம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பின்னர் ஒழுங்குபடுத்தப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.