டெல்லியில் உள்ள சாஸ்திரி பவனில் சட்டத்துறை அமைச்சகம், தகவல் ஒளிபரப்பு, மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை உள்ளிட்ட பல துறைகள் செயல்பட்டவருகின்றன.
இந்நிலையில், இன்று மதியம் 1.30 மணியளவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்த 5 தீயணைப்பு வாகனங்கள், சுமார் 30 நிமிடங்களுக்குள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்தத் தீ விபத்து இரண்டாவது மாடியில் உள்ள சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் அலுவலகத்தில் ஏற்பட்ட ஏசி கோளாறு காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.