கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள குமார் பூங்காவில், அம்மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா, அவரது மனைவி பவுண்யா ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு 10 மணிக்கு அமைச்சரின் அறையினுள் உள்ள குளிர்சாதன பெட்டியில் மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
அறையினுள் தீ கொழுந்து விட்டு எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர், உடனடியாக தனது மருமகன் சந்தோஷுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, தீயணைப்புத் துறைக்கு சந்தோஷ் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து பெரும் விபத்தை தடுத்தனர்.
இந்த தீ விபத்தில் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா அவரது மனைவி ஆகியோர் உயிர் தப்பினர். மேலும், அமைச்சரின் அறையினுள் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
இதையும் படிங்க: முக்கிய வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும்: தலைமை நீதிபதி நாளை அறிவிப்பு?