ETV Bharat / bharat

அளவிற்கு அதிகமான ஆபாசம்: ஓடிடி தளங்கள், பல்வேறு நிறுவனங்கள் மீது மகாராஷ்டிரா சைபர் எஃப்ஐஆர் பதிவு - தகவல் தொழில்நுட்ப சட்டம்

மும்பை: ஆபாசமான மற்றும் பாலியல் ரீதியான உள்ளடக்கங்களை ஆன்லைனில் பரப்பியதாக பல்வேறு ஆன்லைன் தளங்கள், தயாரிப்பு நிறுவனங்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் மீது மகாராஷ்டிரா சைபர் துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

அளவிற்கு அதிகமான ஆபாசம்: ஓடிடி தளங்கள், பல்வேறு நிறுவனங்கள் மீது மகாராஷ்டிரா சைபர் துறை எஃப்ஐஆர் பதிவு

author img

By

Published : Nov 10, 2020, 11:08 PM IST

ஆபாச உள்ளடக்கங்களை பரப்புவதாக கூறி ஹாட்ஷாட், பிளிஸ் மூவிஸ், ஃபெனியோ, குக்கூ, நியோஃப்ளிக்ஸ், உலு, ஹாட்மாஸ்டி, சிக்கூஃப்ளிக்ஸ், தயாரிப்பு நிறுவனம் ஆல்ட் பாலாஜி, பிரைம்ஃபிக்ஸ் மற்றும் சில வலைத்தளங்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் மகாராஷ்டிரா சைபர் துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

பல இளம் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை படம்பிடித்து சர்வதேச அளவில் விற்பனை செய்த ஒரு இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த செய்தியை ஊடகம் வாயிலாக பார்த்த இளைஞர் ஒருவர், இது போன்ற வீடியோக்கள் பல இளம் சிறுமிகளின் வாழ்க்கை அழிக்க வழிவகுத்துள்ளது என்றும் பல்வேறு வலைத்தளங்களில் பாலியல் ரீதியாக வெளிப்படையான ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை வெளியிடுவாதாகவும் அந்த இளைஞர் மகாராஷ்டிரா சைபர் துறையில் புகார் அளித்தார்.

அதில், “ஓடிடி இயங்குதளங்கள் மற்றும் வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்ட வீடியோக்கள் மிகவும் ஆபாசமானவை, இந்த மாதிரியான வீடியோக்களை வெளியிடுவதற்கு எந்தவொரு அதிகாரப்பூர்வமான சான்றளிக்கும் நிறுவனமும் சான்றிதழ் வழங்கவில்லை. வீடியோக்களில் ஆபாசமான முறையில் சித்திரிக்கப்பட்டுள்ள நடிகைகள் மூலம் இளைஞர்கள் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள். இது இளைஞர்கள் மனதில் பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த பிரச்சினை நம் சமூகத்தின் இளைஞர்கள் மனத்தில் பாதகமான விளைவை ஏற்படுத்தக்கூடும் என்பதால், நவம்பர் 6, 2020 அன்று, மகாராஷ்டிரா சைபர் துறை இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.