கரோனா பாதிப்பு நிவாரணத்திற்காக பிரதமர் உருவாக்கியுள்ள பி.எம்.கேர்ஸ் ஃபண்ட் (சிறப்பு நிதி) குறித்து அவதூறு பரப்பியதாகக் கூறி, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மீது, பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கணர்க்பாக் காவல் நிலையத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சோனியா காந்தி மீது முதல் தகவல் அறிக்கையும் பதியப்பட்டுள்ளது.
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு, பிரத்யேக ட்விட்டர் கணக்கு இல்லாத நிலையில், சம்பந்தப்பட்ட கணக்கை சோனியா காந்தி இயக்குவதாகவும், அதிலிருந்து பிரதமர் நிதி குறித்து அவதூறு தகவல் பரப்பப்படுவதாகவும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கர்நாடகா மாநிலம், ஷிமோகா பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்ற வழக்கறிஞர், இதே விவகாரம் தொடர்பாக சோனியா காந்திக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்குக் கண்டனம் தெரிவித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் மாநில முதலைச்சர் எடியூரப்பாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: சமூக சுகாதார ஆர்வலரை தாக்கிய வெளிமாநில பயணி