மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும், வரி குறைப்பு செய்யப்படும் என கூறப்பட்டது.
மின்சார வாகனங்களுக்கு 12 விழுக்காடாக இருந்த ஜிஎஸ்டி வரி, தற்போது 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கான சார்ஜர்களுக்கு ஜிஎஸ்டி வரி 18 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. 12 பயணிகள் மட்டுமே பயணிக்கக் கூடிய மின்சார பேருந்துகளை வாங்கும் தனியார் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி விலக்களிக்கப்படும். இந்த அனைத்து மாற்றங்களும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2019-20ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், மின்சார வாகன உற்பத்திக்கு அதிக நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.