இது குறித்து சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலைய அலுவகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பெங்களூருவில் இருந்து முப்பை வந்த ஃபெட்எக்ஸ் 5033 ரக கார்கோ விமானம் இன்று பிற்பகல் தரையிறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்து ஓடுதளத்திலிருந்து விலகி சென்றது. அதே சமயத்தில் எம்டி 11 ரக விமானம் ஒன்று தரையிறங்கியது. இருந்தபோதிலும் அதிர்ஷ்டவசமாக எவ்வித விபத்தும் நேரவில்லை” எனத் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள நிசார்கா புயல் மகாராஷ்டிரா - குஜராத் இடையே கரையை கடுக்க உள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், மோசமான வானிலை காரணமாகவும் மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து செல்லும் விமானங்கள் பிற்பகல் 2.30 முதல் இரவு 7 மணி வரை ரத்து செய்யப்படுவதாகவும் விமான நிலைய அலுவலகம் தெரிவித்துள்ளது.