இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ஒடிசா மாநிலம் புர்ஜா பஞ்சாயத்துக்குட்பட்ட புஜாரிகுடா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சாகரம் லோஹர். இவர் தனது மனைவி சனாமதியை அங்குள்ள கோயில் ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். கோயிலின் அருகே சென்றதும் மனைவியிடமிருந்து வலுக்கட்டாயமாகக் குழந்தையைப் பிடுங்கி, அங்கிருந்த இரு நபர்களுக்கு 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.
இதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்ததால் அவரையும் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதுகுறித்து அவரது மனைவி காவல்துறையில் புகார் அளித்ததால் இச்சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மதுபானம் வாங்க, பெற்ற குழந்தையையே 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.