ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ், ரஜிதா தம்பதியினர். இவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தைகளை விற்க முடிவு செய்த தந்தை, அங்குள்ளவர்களிடம் விலை பேசியுள்ளார். இத்தகவல் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், பெண்கள் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலன் அலுவலர்களுக்கு தெரியவந்தது.
இதனையடுத்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த அலுவலர்கள் ராஜேஷ்க்கு அறிவுரை கூறினர். மேலும் இத்தவறை மீண்டும் செய்தால் தண்டிக்கப்படுவீர்கள் என்றும் கண்டித்துள்ளனர்.
இதையும் படிங்க: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்?